வவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி!

வவுனியாவில் அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு வறோட் அமைப்பினால் இன்று (11.10) விழிப்புணர்வு பேரணி ஒன்று நடைபெற்றது.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய இப் பேரணியானது வைத்தியசாலை வீதியூடாக இலுப்பையடியை சென்றடைந்து அங்கிருந்து பசார் வீதி வழியாக நகரசபை கலாசார மண்டபத்தை சென்றடைந்து அங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.

விழிப்புணர்வுப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கண்களை கறுப்பத்துணியால் கட்டி ஒருவர் பின் ஒருவராக கைகளை கோர்த்தபடி ஊர்வலமாக சென்றிருந்தனர்.

இந் நிகழ்வில் விசேடமாக கண்தானம் செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் கண்தானம் செய்ய விரும்புவர்களால் பூர்த்தி செய்து வழங்கப்பட்டிருந்தது. விழிப்புணர்வு நிகழ்வில் யாழ் விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள், வன்னி விழிப்புணர்வற்ற சங்க உறுப்பினர்கள், தாதியர் கல்லூரி மாணவர்கள், மதகுருமார்கள், வவுனியா மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ். வாசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

#vavuniya   #vanni  #vasan  #தாதியர்  #கல்லூரி #மாணவர்கள், #மதகுருமார்கள், #வவுனியா   #விழிப்புணர்வு   #விழிப்புலனற்றோர்

No comments

Powered by Blogger.