மாகாணசபைத் தேர்தல் – கட்சிகளிடையே இணக்கப்பாடில்லை – மகிந்த!

மாகாண சபைத் தேர்­தல் தொடர்­பில் கட்­சி­கள் தங்­க­ளின் கட்சி நிலைப்­பாட்­டினை முன்­வைக்­கின்­ற­னரே தவிர, இது­வ­ரை­யில் பொது­வான நிலைப்­பாட்­டுக்கு வர­வில்லை. இவ்­வாறு தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் தலை­வர் மகிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­தார்.
மாகாண சபைத் தேர்­தல் தொடர்­பில் கட்­சித் தலை­வர்­க­ளின் சந்­திப்பு, தேர்­தல்­கள் ஆணை­ய­கத்­தில் நேற்று இடம்­பெற்­றது. இந்­தச் சந்­திப்­பின் பின் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கும்­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

எல்லை வரம்பு மீளாய்வுக் குழு­வின் அறிக்கை அரச தலை­வ­ருக்­குச் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தன் பின்­னரே மாகாண சபைத் தேர்­தலை எந்த முறை­யில் நடத்த வேண்­டும் என்ற நிலைப்­பாட்­டுக்கு வர முடி­யும்.

மேலும், எவ்­வி­த­மான அழுத்­தங்­க­ளு­மின்றி சுயா­தீ­ன­மா­கவே தேர்­தல் ஆணை­ய­கம் செயற்­ப­டு­கின்­றது. தேர்­தல் திருத்­தங்­கள் தொடர்­பில் அரசு உறு­தி­யான தீர்­மா­னங்­களை மேற்­கொண்­டால் மாகாண சபைத் தேர்­தலை இந்த ஆண்­டி­லேயே நடத்த தயார் – என்­றார்.

இந்­தச் சந்­திப்­பில் கலந்து கொண்ட ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பொதுச் செய­லர் அகி­ல­வி­ராஜ் காரி­ய­வ­சம், மாகா­ண­ச­பைத் தேர்­தல் தொடர்­பான அறி­விப்பு விரை­வில் வெளி­வ­ரும்.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிறு­விய குழு­வா­னது இன்­னும் இரண்டு மாதங்­க­ளுக்­குள் தேர்­தல் குறித்த அறி­விப்பை தலைமை அமைச்­ச­ருக்கு அறி­விக்­கும். அதன் பின்­னர் ஏனைய நட­வ­டிக்­கை­களை எடுக்க முடி­யும், என்று குறிப்­பிட்­டார்.

இந்­தச் சந்­திப்­பில் பங்­கேற்ற சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லசந்த அல­கி­ய­வன்ன, எல்லை வரம்பு அறிக்கை மீதான மீளாய்­வு­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­வு­டன் இரண்டு மாதங்­க­ளில் மாகாண சபை தேர்­தல் இடம்­பெ­றும்.

அனைத்துக் கட்­சி­க­ளும் மாகாண சபை தேர்­தலை விரை­வில் நடத்­தவே எதிர்­பார்க்­கின்­றன. தேர்­தலை காலம்­தாழ்த்­து­வது அர­சின் நோக்­கம் அல்ல -–- என்­றார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.