அரசமைப்பு வரைவு சமர்ப்பிப்பு- டக்ளஸால் தள்ளிப் போனது!

அர­சி­யல் நிர்­ணய சபை­யா­கக் கூட­வுள்ள நாடா­ளு­மன்­றில் புதிய அர­ச­மைப்பு வரைவு எதிர்­வ­ரும் 25 ஆம் திகதி சமர்­பிக்­கப்­ப­டும் என்று முன்­னர் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இருப்­பி­னும் நேற்று இடம்­பெற்ற வழி­ந­டத்­தல் கூட்­டத்­தில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்தா, ஒரு­மித்த நாடு என்­ப­தற்­குப் பதி­லாக ஒற்­றை­யாட்சி என்ற சொல் பயன்­ப­டுத்­த­வேண்­டும் என்று விடாப்­பி­டி­யாக நின்­ற­மை­யி­னால், புதிய அர­ச­மைப்பு வரைவு சமர்­பிப்பு அடுத்த மாதம் 7ஆம் திக­திக்கு தள்­ளிப்­போ­யுள்­ளது.

கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்­பெற்ற வழி­ந­டத்­தல் குழுக் கூட்­டத்­தில், புதிய அர­ச­மைப்­புக்­கான வரைவு அர­சி­யல் நிர்­ணய சபை­யாக ஒக்­ரோ­பர் மாதம் 25ஆம் திகதி கூடும் நாடா­ளு­மன்ற அமர்­வில் சமர்­பிக்க முடி­வெ­டுக்­கப்­பட்­டது.

அதற்கு முன்­ன­தாக ஒக்­ரோ­பர் மாதம் 11ஆம் திகதி வழி­ந­டத்­தல் குழுக் கூட்­டத்தை நடத்­து­வது என்­றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. வழி­ந­டத்­தல் குழுக் கூட்­டத்­தில், புதிய அர­ச­மைப்பு வரை­வின் தமிழ் மற்­றும் சிங்­கள மொழி ஆவ­ணங்­களை ஆராய்­வது என்­றும் முடி­வெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யில் வழி­ந­டத்­தல் குழு நேற்று பி.ப. 2 மணிக்கு கூடி­யது. சுமார் ஒன்­றரை மணி நேரம் கூட்­டம் இடம்­பெற்­றது.

நாட்­டின் தன்மை தொடர்­பில், ஏக்­கிய ராஜ்­ஜி­யஃ­ஒ­ரு­மித்த நாடு என்று வரை­வில் கூறப்­பட்­டுள்­ளது. ஒரு­மித்த நாடு என்ற சொல் பயன்­ப­டுத்­தக் கூடாது. அதற்­குப் பதி­லாக ஒற்­றை­யாட்சி என்ற சொல் இருக்க வேண்­டும் என்று ஈ.பி.டி.பியின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்தா வலி­யு­றுத்­தி­யுள்­ளார். இதே கருத்தை முன்­ன­ரும் கூறி­யுள்­ளேன் என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதன்­போது கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், அப்­ப­டி­யா­னால் நாடு பிள­வ­டை­வ­தையா நீங்­கள் விரும்­பு­கின்­றீர்­கள் என்று கேள்வி எழுப்­பி­யுள்­ளார். இல்லை என்று டக்­ளஸ் பதி­ல­ளித்­துள்­ளார்.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இடைக்­கால அறிக்கை வெளி­யி­டு­வ­தற்கு முன்­னர் நீங்­கள் ஒரு­மித்த நாடு என்ற சொல்­லுக்­குப் பதி­லாக ஒரு­நாடு என்ற சொல்­லைப் பயன்­ப­டுத்­து­மா­று­தான் கூறி­னீர்­கள். ஒற்­றை­யாட்சி என்­ப­தைச் சொல்­ல­வில்லை.

ஒரு­மித்த நாடா அல்­லது ஒரு நாடா, எந்­தச் சொல்­லைப் பயன்­ப­டுத்­து­வது என்­பது தொடர்­பில் வழி­ந­டத்­தல் குழு­வின் தமிழ் உறுப்­பி­னர்­க­ளி­டம் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. உங்­க­ளைத் தவிர ஏனை­யோர் ஒரு­மித்த நாடு என்ற சொல்­லைப் பயன்­ப­டுத்­து­மாறே வாக்­க­ளித்­தார்­கள். அத­ன­டிப்­ப­டை­யில் ஒரு­மித்த நாடு என்ற சொல் பயன்­ப­டுத்­தப்­பட்­டது, என்­றார்.

யாரோ உங்­களை குழப்­பச் சொல்லி அனுப்­பி­யி­ருக்­கின்­றார்­கள் என்று கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ள­ஸைப் பார்த்­துக் கூறி­யுள்­ளார்.

இதன் பின்­னர் கருத்­துத் தெரி­வித்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன், சரி ஒரு­நாடு என்று வேண்­டு­மா­னால் பயன்­ப­டுத்­த­லாம் என்று கூறி­யுள்­ளார். கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன், அப்­ப­டிப் பயன்­ப­டுத்த முடி­யாது. அவர் ஒரு­வர் சொல்­வ­தற்­காக அப்­படி மாற்ற முடி­யாது என்று சத்­த­மா­கக் கூறி­யுள்­ளார்.

ஒரு­நாடு அல்­லது ஒற்­றை­யாட்சி என்ற அவ­ரது கருத்தை, அறிக்­கை­யின் பின்­னி­ணைப்­பாக வேண்­டு­மா­னால் குறித்­துக் கொள்­ள­லாம் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்­தக் குழப்­பங்­கள் கார­ண­மாக ஒரு­மித்த நாடு மற்­றும் ஒரு­நாடு இரண்­டி­ன­தும் தமிழ் விளக்­கங்­களை ஆரா­ய­வேண்­டும் என்­றும், அர­ச­மைப்பு வரைவு நகலை முழு­மை­யா­கப் படித்து முடிக்க நேரம் போத­வில்லை என்­றும் மகிந்த அணி­யி­னர் கூறி­யுள்­ள­னர்.

இத­னை­ய­டுத்து எதிர்­வ­ரும் 25ஆம் திகதி வழி­ந­டத்­தல் குழுக் கூட்­டத்தை மீண்­டும் கூட்­டு­வது என்­றும், நவம்­பர் 7ஆம் திகதி அர­சி­யல் நிர்­ண­ய­ச­பை­யா­கக் கூடும் நாடா­ளு­மன்­றுக்­குச் சமர்­பிப்­பது என்­றும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

வழிநடத்தல் குழுக் கூட்டத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகவே வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.