குப்பைத் தொட்டியாகும் புத்தளம்!

புத்தளத்தை இலங்கையின் குப்பைத் தொட்டியாக உருமாற்றும் அரசின் திட்டத்திற்கு எதிரான சத்தியாக்கிரக போராட்டம் 14ஆவது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) தொடர்ந்து வருகிறது.

புத்தளத்தில் இயங்கும் தன்னார்வ தொண்டு அமைப்பினர்கள் இந்த குப்பைத் திட்டத்துக்கு எதிராக சுழற்சி முறையில் இரவு, பகலாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இப்போராட்டத்திற்கு அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புகள், மதத் தலைவர்கள் என பலரும் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இப்போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தி வட மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அயூப் அஸ்மின், சட்டத்தரணி சயந்தன் ஆகியோர் போராட்டத்தில் கலந்துக் கொண்டிருந்தனர்.

இதன்போது அங்கு கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம், ”இது புத்தளத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினையல்ல. இலங்கையில் திண்மக் கழிவகற்றல் என்பது பாரதூரமானதொரு பிரச்சினையாக மாறியுள்ளது.

புத்தளத்தில் இதற்கு முன்னர் இரண்டு திட்டங்களினால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

சூழலுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது என வாக்குறுதி வழங்கி புத்தளத்தில் இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட சீமெந்து தொழிற்சாலை மற்றும் அனல் மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றால் மக்கள் மிகவும் நொந்துப் போய், கொதித்துப்போய் இருக்கின்றனர்” எனத் தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.