வவுனியா விபுலானந்தா கல்லூரியில் -குடிநீர் இயந்திரத் தொகுதி திறப்பு!

வவுனியா விபுலானந்த கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வட மாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராஜாவின்
குறித்தொகுக்கப்பட்ட நிதி மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் நிதி ஆகியவற்றின் உதவியுடன் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்தரிகரிப்பு இயந்திர தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் பொன்னையா சிவநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராஜா கலந்து கொண்டு குடிநீர் சுத்தரிகரிப்பு இயந்திர தொகுதியியைத் திறந்து வைத்தார்.

No comments

Powered by Blogger.