பெண்களுக்கு தையல் பயிற்சிகள் மன்னார் மாவட்டத்தில் ஆரம்பம்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், பெண்களுக்கான தையல் பயிற்சி வகுப்புக்கள் இன்று மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மன்னார் பிரதேச சபை தவிசாளர் எம்.முஜாகிர் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், தையல் பயிற்சி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டன.

மன்னார் பிரதேச சபை பிரிவுக்குற்பட்ட தாழ்வுபாடு, தாராபுரம், தோட்டவெளி, புதுக்குடியிருப்பு, கரிசல், காட்டாஸ்பத்திரி, பேசாலை, தலைமன்னார், போன்ற கிராமங்களில் இந்தப் பயிற்சி வகுப்புக்கள் நடைபெறவுள்ளன.

நிகழ்வில் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாணப் பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

No comments

Powered by Blogger.