நீரில் மூழ்கி பிரித்தானிய பிரஜை உயிரிழப்பு!

பெந்தோட்ட கடற்பரப்பில் நீராடச் சென்ற பிரித்தானிய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று(வியாழக்கிழமை) மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்போது 49 வயதான பிரித்தானிய பிரஜையே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நாகோட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Powered by Blogger.