பதவி குறித்து பொலிஸ்மா அதிபர் எடுத்துள்ள திடீர் முடிவு?

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்த தனது பதவியை அடுத்த வாரம் இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கள பத்திரிகை ஒன்று குறித்த செய்தியை இன்று வெளியிட்டுள்ளது.

அண்மைக் காலமாக பொலிஸ்மா அதிபரின் நடவடிக்கைகள் தொடர்பில் பாரிய விமர்சனங்கள் எழுந்திருந்தன.

இதையடுத்து பொலிஸ்மா அதிபர் பதவியை இராஜினாமா செய்யுமாறு பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜனாதிபதி அறிவித்தல் வழங்கியிருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இதையடுத்தே பொலிஸ்மா அதிபர் இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், தற்போதை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்த தனது பதவியை இராஜினாமா செய்யுமிடத்து, அந்த பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களான எஸ்.எம். விக்ரமசிங்க அல்லது சந்தன விக்ரமசிங்க ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் குறித்த சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

#Pujith Jayasundara   #சிங்கள பத்திரிகை  #பூஜித் ஜயசுந்தர  #பொலிஸ்மா  #எஸ்.எம். விக்ரமசிங்க

No comments

Powered by Blogger.