காலி முகத்திடல் போராட்டம் நல்லாச்சிக்கு ஒரு எச்சரிக்கை!

மலையகம் விழித்தெழுந்துவிட்டது. காலி முகத்திடல் எழுச்சிப்போராட்டம் அரசாங்கம் உட்பட அனைவருக்கும் சிகப்பு எச்சரிக்கையே என தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு இன்று (வியாழக்கிழமை) விஜயம் மேற்கொண்ட அமைச்சர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “இது அனைவருக்கும் உரிய சமத்துவமான நாடு. இந்நாட்டில் யாரும் யாரும் யாரையும் அடக்கியாள முடியாது. முன்னர் அவ்வாறான விடயம் இருந்தாலும் நாம் படிப்படியாக அதனை மாற்றிவருகின்றோம்.

அத்துடன் மலையகம் விழித்தெழுந்து விட்டது. அது ஒளிர்கிறது. காலி முகத்திடல் எழுச்சிப்போராட்டம் அரசாங்கம் உட்பட அனைவருக்கும் சிகப்பு எச்சரிக்கையை விட்டிருப்பதாக எண்ணுகிறேன்.

இந்த விடயம் தொடர்பாக அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறோம். அரசு எமக்கு ஒத்துழைக்காவிடின் பங்காளிக்கட்சியான நாம் எமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டிவரும் என்று கூறியிருக்கின்றோம்” என்று தெரிவித்தார்.
Powered by Blogger.