போர் குற்றச்சாட்டிற்குள்ளான அதிகாரியை திருப்பியழைக்க நடவடிக்கையாம்!

இராணுவ அதிகாரியான லெப்டினன் கேர்ணல் கலன அமுனுபுரவை மீண்டும் நாட்டுக்குள் அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளமையை இலங்கை இராணுவம் உறுதிசெய்துள்ளது.


இது தொடர்பில் இலங்கை இராணுவம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட ஆபிரிக்க நாடான மாலியில் அமைதிகாக்கும் படையணியில்பணியாற்றிய நிலையில் நாடுகடத்தப்பட்டுள்ள இலங்கை இராணுவ அதிகாரியான லெப்டினன் கேர்ணல் கலன அமுனுபுர தொடர்பான முன்கூட்டிய பரிசோதனையை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டிருக்கின்றது.

ஐ.நா அமைதி காக்கும் படையணிக்கு இலங்கை படையினரை இணைத்துக்கொள்வதற்கு முன்னதாக அந்த படை அதிகாரியோ அல்லது படை சிப்பாயோ மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவே இந்த முன்கூட்டிய ஆய்வு நடத்தப்படுகின்றது.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ள லெப்டினன் கேர்ணல் கலன அமுனுபுர, வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தொடர்புபட்டிருந்த போர் குற்றங்களே காரணமாக அமைந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

மாலியில் பணியாற்றிவரும் ஐ.நா. அமைதி காக்கும் படையணியின் இலங்கை படையின் கட்டளைத் தளபதியாக இருந்த லெப்டினன் கேர்ணல் கலன அனுமுபுர தொடர்புபட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து அண்மையில் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஐ.நா செயலாளர் நாயக்தின்பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.