வவுனியாவில் பட்டாரக வாகனம் மோதியதில் நான்கு பேர் காயம்!

வவுனியா கற்பகபுரம் பகுதியில் வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை அவ்வீதி வழியாக வந்த பட்டாரக வாகனம் மோதியதில் முச்சக்கரவண்டியில் இருந்த நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற வாகனம் பள்ளத்தில் புதையுண்டதால் சாரதி தப்பி ஓடியுள்ளார்.

இவ் விபத்தில் முற்சக்கரவண்டியில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் பெண்ணொருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய பட்டாரக வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

#Vavuniya  #வவுனியா #கற்பகபுரம்  # முச்சக்கரவண்டி  # இரு சிறுவர்கள் #நால்வர்  #பூவரசங்குளம் #பொலிஸார்
Powered by Blogger.