வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தனியான சுயாட்சி!


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தனியான சுயாட்சியை வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை தயார் செய்து முடிந்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

பெலியத்தை பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

2015ஆம் ஆண்டு தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காக புதிய அரசியலமைப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான ஆரம்ப வரைவு எனக்கு கிடைத்துள்ளது. இதனடிப்படையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனியான பொலிஸ் துறை ஏற்படுத்தப்பட உள்ளது.

இதன் பின்னர் இந்த மாகாணங்களுக்கு செல்ல தனியான கடவுச்சீட்டை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.
#Northern Province #Eastern Province  #வடக்கு #கிழக்கு  #புதிய அரசியலமைப்பு 
#அரசாங்கம்   #சுயாட்சி

No comments

Powered by Blogger.