புதிய அரசியலமைப்பை உருவாக்க அரசாங்கமே தேவை!

புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்த மக்கள் நம்பிக்கையை வென்ற ஒரு அரசாங்கமே அவசியம் என, முன்னாள் அமைச்சரும், பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“அரசியலமைப்பினை சமர்ப்பித்து, அதனை நடைமுறைப்படுத்த நாட்டு மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரு அரசாங்கம் அவசியம்.

ஒரு நாட்டினது அரசியலமைப்பு என்பது, 10, 20 வருடங்கள் மாத்திரம் செல்லுபடியாகும் எழுத்து மூலமான ஒரு ஆவணம் அல்ல. அது பரம்பரை பரம்பரையாக தாக்கம் செலுத்தும் ஒன்றாகவே அமைகின்றது.

அவ்வாறான ஒரு அரசியலமைப்பைத் தயாரிக்க பரந்துபட்ட கொள்கைகளின் அடிப்படையில் அபரிமிதமான ஒரு நம்பிக்கை அவசியமாகின்றது. ஆனால் இந்த அரசாங்கத்தின் மீது அவ்வறான ஒரு நம்பிக்கை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.