விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்!

திரைப்படத்திற்கு ‘சர்கார்’ என்று பெயர் வைப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றால், நியவாழ்வில் சர்காரிலிருந்து ஆட்சி செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாதா என்று, நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்த கருத்துக்களுக்கு  தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னையில் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கூறிய அவர்,

“வாழ்நாளில் மக்கள் குறித்து கவலைப்படாமல், தனது கஜானாவை மட்டுமே நிரப்புவதை கொள்கையாக கொண்ட ஒருவர், அந்த நேரத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல்  திடீரென அரசியலுக்கு வந்து, அரசியல்வாதிகளை விமர்சிப்பது எப்படியென்று தெரியவில்லை.

அவர்களை பொறுத்தவரை அனைத்துமே சினிமா தான். எனவே சினிமா துறையினர் அரசியலுக்கு வந்ததும் தகுந்த பதில் கூறுவேன்” என தமிழிசை மேலும் தெரிவித்துள்ளார்.

நடிகர்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த், உள்ளிட்டோரை தொடர்ந்து நடிகர் விஜய் அரசியலுக்கு வரவுள்ளதா தகவல்கள் பரவும் நிலையில் பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ள அதேவேளை, தமிழிசை மேற்படி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.