மன்னாா் தொடக்கம் பொத்துவில் வரை கரையோர பகுதி மக்களுக்கு எச்சாிக்கை.!

இலங்கையில் மன்னாா் தொடக்கம் பொத்துவில் வரையான கரையோர பகுதியிலிருந்து மீனவா்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என மத்திய கடற்றொழில் திணைக்களம் இன்று எச்சாிக்கை விடுத்திருக்கின்றது.

மன்னாா் தொடக்கம் கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் வரையான கரையோர பகுதிகளில் இருந்து கடற்றொழிலுக்காக மீனவா்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என கடற்றொழில் அமைச்சு மீனவா்களை அறிவுறுத்தியுள்ளது.

குறித்த கடற்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதுடன், காற்று மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றா் வரையான வேகத்தில் வீசும் வாய்ப்புக் கள் உள்ளதால் கடலுக்குள் சென்றால் மீனவா்களுக்கு பாதிப்புண்ணடாகும் வாய்ப்புள்ளது.

ஆகவே மீனவா்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

# மன்னாா் #பொத்துவில்  #எச்சாிக்கை  #மீனவா்கள்   #கொழும்பு  #காலி  #மாத்தறை  #ஹம்பாந்தோட்டை   #mannar  #pothuvil  #colombo  #galie #matharai  #gampanthodai #srilanka #fishermen #sea

No comments

Powered by Blogger.