'சினிமாவில் எல்லாம் சம்மதத்துடனே நடக்கிறது' நடிகை ஷில்பா ஷிண்டே

சமீப நாட்களாக பாலியல் அத்துமீறல்கள் குறித்தும் இணையத்தில் கொடுக்கப்படும் மன உளைச்சல்கள் குறித்தும் தைரியமாக பெண்கள் குரல் கொடுத்து வருகின்றனர். சினிமா, பத்திரிக்கை உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த பெண்களும் தினம் தினம் ட்விட்டரில் #metoo என்ற ஹேஷ்டேக் மூலம் பாலியல் அத்துமீறல்கள் குறித்து தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட்டில் பிரபல திரைப்பட இயக்குநர் நானா படேகர் மீது இந்தி நடிகை புகார் தெரிவித்தார். அவருக்கு ஏராளமான பிரபலங்கள் ஆதரவு தெரிவித்ததால், அவரைத் தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட பிரபலங்களும், பணியின் போது தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பகிரங்கமாக கூறினர். தமிழில் திரைப்பட பின்னணி பாடகி சின்மயி-யும்  #metoo ஹேஸ்டேக் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய பாலிவுட்டைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை ஷில்பா ஷிண்டே, ''மீ டூ பிரசாரம் ஒரு குப்பை. அந்த நேரத்தை நீங்கள் எளிதாக கடந்து வர வேண்டும். அப்போது மட்டுமே அதைப்பற்றி பேச வேண்டும். நீங்கள் தாமதமாக குரல் கொடுத்தால் உங்களை யாரும் கவனிக்க மாட்டார்கள்.  எனக்கும் இது போன்ற ஒரு அனுபவம் கிடைத்துள்ளது.  என்று தெரிவித்தார்.

மேலும் எல்லா இடங்களிலும் இந்த விஷயங்கள் நடக்கின்றன. சினிமா துறை மோசமானதல்ல நல்ல துறை தான். இந்தத்துறையின் பெயரை ஏன் கெடுக்கிறார்கள் என தெரியவில்லை. இந்தத்துறையில் கட்டாயப்படுத்தி யாரும் பலாத்காரம் செய்யப்படுவதில்லை. எல்லாம் பரஸ்பர புரிதலில் நடக்கும் கொடுக்கல் வாங்கல் முறைதான். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அதை தவிர்த்துவிடுங்கள்'' என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.