சிங்கப்பூர்க் காவல்துறையினர் மேற்கொண்ட 3 நாள் சோதனையில் 53 பேர் கைது

சிங்கப்பூர்க் காவல்துறையினர் மேற்கொண்ட 3 நாள் சோதனையில் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு குற்றங்களைப் புரிந்த சந்தேகத்தின் பேரில் 47 ஆடவர்களும் 6 பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 20 வயதுக்கும் 79 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

சூதாட்டம் தொடர்பான குற்றங்களைப் புரிந்த சந்தேகத்தின் பேரில் 26 ஆடவர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.


கிங் ஜார்ஜ் அவென்யூ (King George Avenue), பண்டா ஸ்ட்ரீட் ( Banda Street), தெலுக் பிளாங்கா கிரசெண்ட் (Telok Blangah Crescent), ஜாலான் புக்கிட் மேரா (Jalan Bukit Merah) ஆகிய பகுதிகளில் அவர்கள் பிடிபட்டனர்.

அவர்களிடமிருந்து கிட்டத்தட்ட 3,560 வெள்ளி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் சந்தேக நபர்களுக்கு 5,000 வெள்ளி வரை அபராதமோ ஆறு மாதச் சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

மற்ற சந்தேக நபர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவும் குடிநுழைவு தொடர்பான குற்றங்களுக்காகவும் பிடிபட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களின் மீது விசாரணை தொடர்வதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.   
Powered by Blogger.