மோடியை சந்திக்கும் ரணில்!

இந்தியாவுக்கு இந்த வாரம் விஜயம் மேற்கொள்ள உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க உள்ளார்.

எதிர்வரும் 19, 20ஆம் திகதிகளில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புதுடில்லியில் உயர்மட்ட சந்திப்புக்களை நடத்த உள்ளார்.

இந்த நிலையில், இந்திய உதவியுடனான சில திட்டங்கள் தாமதமடைவது குறித்து, பிரதமர் ரணிலிடம் புதுடில்லி கரிசனை வெளியிடலாம் என இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

மத்தள மற்றும் பளை விமான நிலையத் திட்டங்கள், திருகோணமலை எண்ணைத் தாங்கிகளைக் கையாளும் திட்டம் உட்பட முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் இந்தியத் தரப்பில் கவனம் செலுத்தப்படும் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.