மலேசியாவில் சிகரெட்டுகளுக்கான விலையை உயர்த்தவுள்ளது!

மலேசியா இம்மாத இறுதிக்குள் சிகரெட்டுகளுக்கான விலையை உயர்த்தவுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அகமத் (Dzulkefly Ahmad) தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட விற்பனை, சேவை வரி காரணமாகப் புகையிலைப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. எனவே சிகரெட்களின் விலையும் உயர்த்தப்படும் என்று அவர் கூறினார்.

மது வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 18 லிருந்து 21-க்கு உயர்த்தப்படுவதாகவும் டாக்டர் ஸுல்கிஃப்லி அறிவித்துள்ளார். அது உடனடியாக நடப்பிற்கு வருகிறது.

சில்லறை வர்த்தகக் கடைகள், மதுபானம் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்ற அறிவிப்புப் பலகையை வைக்க வேண்டும்.

ஏனைய உணவு, பானங்களிலிருந்து மதுவைத் தனித்து வைத்திருக்க வேண்டும் என்றும் டாக்டர் ஸுல்கிஃப்லி கூறினார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.