ஜனாதிபதிக்கிடையில் தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையினை, தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி உயர் பீட உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (புதன்கிழமை) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

தோட்டத் தொழிலாளர்கள் சம்பளப் பிரச்சினை உக்கிரமடைந்துவரும் நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அந்தப் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரும் அசவர சந்திப்பாக நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து, செவிமடுத்த ஜனாதிபதி அந்த கோரிக்கை நியாயமானது என உணர்ந்ததுடன், நாளை மறுதினம் நிதியமைச்சர், தொழில் அமைச்சர், பெருந்தோட்டத்துறை அமைச்சர் ஆகியோருடன் கலந்தாலோசித்து விரைவான தீர்மானம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதாகவும் உறுதியளித்ததாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில், கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித்தலைவர்களான பழநி திகாம்பரம், வே.ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.திலகராஜ், வேலு குமார், அரவிந்தகுமார் மாகாண சபை உறுப்பினர்கள், கூட்டணியின் உயர்மட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் 1000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி, போராட்டங்களைத் தொடர்கின்றனர்.

அவர்கள் தமது கோரிக்கை தொடர்பில் நாட்டின் தலைவர் என்றவகையில் ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.