கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழர்கள் மூவர் கைது!

போலிக்கடவுச் சீட்டின் மூலம் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் வட மாகாணத்தினைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவிற்கு பயணிக்க முயற்சித்த நிலையிலேயே நேற்று(செவ்வாய்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது யாழ்.பருத்தித்துறையைச் சேர்ந்த பொன்னுத்துரை துவாரகன் (வயது – 37) , அரியரத்னம் விஜய் (வயது-22) மற்றும் மன்னார் பேசாலையைச் சேர்ந்த மரியதேவாஸ் நிரோஜன் (வயது – 28) ஆகிய தமிழர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் வத்தளையைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியா ஊடாக இவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் பயணிக்க முயற்சித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர். 

 #கட்டுநாயக்க #விமான நிலைய   #தமிழர்கள்  #கைது   #airphot  #srilanka  #colombo  #tamilnews   #arest   #யாழ்   #பருத்தித்துறை   #மன்னார்    #பேசாலை  #பொலிஸார்   #வட ஆபிரிக்க

No comments

Powered by Blogger.