சாத்தியமற்ற விடயமாகிறது இடைக்கால அரசாங்கம்- ஐ.தே.க!

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது சாத்தியமற்ற விடயமாகும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே சுற்றாடல் பிரதி அமைச்சர் அஜித் மானபெரும இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இடைக்கால அரசாங்கத்தை அமைத்தல் சாத்தியமற்ற விடயமாகும்.

அத்துடன் 2020 ஆம் ஆண்டில் மாத்திரம் அல்ல அதனைத் தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை அபிவிருத்தி பாதையில் இட்டு செல்வார்கள்

நல்லாட்சி அரசாங்கமானது நாட்டில் பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்களினூடாக நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்கின்றது.

அதற்கு சாதகமான வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் ஒன்றிணைந்து நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டு செல்ல ஒத்துழைக்க வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

#ஐக்கிய தேசிய கட்சி    #ஊடகவியலாளர்கள்  #மைத்திரிபால சிறிசேன  #ரணில் விக்கிரமசிங்க  #அபிவிருத்தி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.