சினிமாவிலிருந்து விலகுகிறேன்: ரிச்சா

சினிமாவுக்கு மீண்டும் திரும்ப போவதில்லை என்று நடிகை ரிச்சா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிறந்து அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் வளர்ந்தவர்
ரிச்சா. இவர் புனித லூயிஸ் ஓலின் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி. ஏ. படித்து முடித்துள்ளார். அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தபோது திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்ததால் இந்தியா வந்து சில திரைப்படங்கள் நடித்தார்.
ராணா நடித்த ‘லீடர்’ என்ற தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமான ரிச்சா, தனுஷ் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியான ’மயக்கம் என்ன’ படம் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் பெரிதும் வராத காரணத்தால் அமெரிக்காவிற்கே மீண்டும் சென்றுவிட்டார்.
இந்நிலையில், “எனக்கு 90வயது ஆகும்போது கூட என்னிடம் ‘உங்களின் அடுத்த படம் எப்போது?’ என்ற கேள்வி கேட்கப்படும் என்ற யதார்தத்தை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அதேவேளையில், திரைப்பட பிரவேசம் என்பது என்னை பொருத்தவரை ஒரு குறுகிய கால வீச்சு. அதற்குள் மீண்டும் திரும்ப நான் விரும்பவில்லை. கடந்துவிட்டேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரிச்சா.
இதனையடுத்து ‘மீடூ அனுபவத்தினால் விலகுகிறீர்களா’ என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, “அது போல் அனுபவம் எனக்கு ஏற்பட்டதில்லை. விலக வேண்டுமென்று தோன்றியது, எனவே வெளியேறுகிறேன். நீங்கள் நம்பினால் நம்புங்கள், என்னுடன் பழகியவர்கள் யாரும் அது போன்று நடந்தது கிடையாது. அந்த அளவு நான் உறுதியாக இருக்கிறேன்” என்று பதில் கூறியுள்ளார்.
Powered by Blogger.