வவுனியா வளாக முதல்வரின் பதவிக்காலம் நீடிப்பு

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக முதல்வர் கலாநிதி ரி. மங்களேஸ்வரனின் பதவிக்காலம் 3 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வளாகத்தின் வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக செயற்பட்டு வரும் கலாநிதி ரி. மங்கேளேஸ்வரனின் சேவைக்காலம் அண்மையில் முடிவடைந்த நிலையில், யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனினால் 3 வருடங்களுக்கான கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா வளாகத்தின் வளர்ச்சிக்கு பல்துறைகளினாலும் தனது பங்களிப்பை மேற்கொண்டு வரும் கலாநிதி ரி. மங்களேஸ்வரன் வவுனியா வளாகத்தினை வன்னி பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு தன்னாலான முயற்சியை எடுத்து வரும் நிலையில் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது தொடர்பில் வவுனியா மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

#vavuniya  #university  #tamilnews  #srilanka  #ரி. மங்களேஸ்வரன்  #வவுனியா   #வன்னி  #இ. விக்னேஸ்வரன்

No comments

Powered by Blogger.