சுதந்திர கட்சியின் அமைப்பாளர் சட்ட விரோத துப்பாக்கிகளுடன் கைது!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவனல்ல பகுதியின் அமைப்பாளர் சட்ட விரோத துப்பாக்கிகளுடன் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) காலை அவரது வீட்டை சோதனை செய்த போதே இவை கண்டெடுக்கப்பட்டதாகவும், இதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மாவனல்லை அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான இம்தியாஸ் காதர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து அனுமதிப்பத்திரமற்ற MP5K மற்றும் T-56 ரக துப்பாக்கிகள் உட்பட மூன்று மற்றும் அதற்கான தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் அவரிடம் கைப்பற்றப்பட்ட MP5K ரக துப்பாக்கியானது இலங்கையில் விசேட பிரமுகர்களின் (VIP) பாதுகாப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

#MP5K   #T-56   #ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி  #துப்பாக்கி  #கைது   #இம்தியாஸ் காதர் 
Powered by Blogger.