இலங்கை சிறையில் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரி மோடிக்கு எடப்பாடி கடிதம்!

இலங்கை சிறையில் கைது செய்து தடுத்து வைத்துருக்கும் 8 தூத்துக்குடி மீனவர்கள் உற்பட 16 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்மென பிரதமர் நரேந்திரமோடிக்கு, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

முதல்-அமைச்சர்எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதத்தில் எழுதியாதவது.

மன்னார் வளைகுடாவில் தங்கள் எளிமையான வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்ட புதிய நடைமுறை தொடர்பாக மிகுந்த கவலையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கடந்த 21-ந் திகதி இலங்கை கடற்படையால் அவர்கள் படகுகளோடு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடல்பகுதிக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க செல்பவர்களுக்காக என்று கூறிக்கொண்டு நிறைவேற்றப்பட்ட மீன்வளம் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் பிரிவுகளின் அடிப்படையில், ஒவ்வொருவருக்கும் தண்டனை விதித்து இலங்கை ரூபாயில் ரூ.60 லட்சம், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.26 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதத் தொகை செலுத்தப்படாவிட்டால், அவர்கள் 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

#எடப்பாடி பழனிச்சாமி   #தூத்துக்குடி  #இலங்கை  #நரேந்திரமோடி   #விடுதலை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.