திருகோணமலையில்57நபர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல்!

திருகோணமலை நீதிமன்றத்தில் வருமான வரி செலுத்தாத 57 நபர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தம்புள்ள பிராந்திய அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வருமான வரியை செலுத்தாமல் இருப்பவர்களுக்கு எதிராக திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதேவேளை, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வருமான வரியை செலுத்தத் தவறும் பட்சத்தில் அப்பணத்தை தண்டப்பணமாக அறவிடுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

செலுத்த வேண்டிய வரியை வழங்கப்பட்ட திகதிக்கு முன்னர் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

#Tax  #Trincomalee  #tamilnews  #srilanka  #திருகோணமலை  #இறைவரி  #வருமான வரி  

No comments

Powered by Blogger.