மாற்று அரசாங்கத்தை உருவாக்க மஹிந்த அணியினால் முடியாது – ஐ.தே.க!

பொது எதிரணியினரால் மாற்று அரசாங்கத்தையோ அல்லது புதிய அரசாங்கத்தையோ உருவாக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும்  கருத்து வெளியிட்ட அவர், “பொது எதிரணியினரால் மாற்று அரசாங்கத்தையோ அல்லது புதிய அரசாங்கத்தையோ உருவாக்க முடியாது.

மாற்று அரசாங்கத்துக்கு பதிலாக முடியுமானால் நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை பெற்று புதிய அரசாங்கத்தை கூட்டு எதிரணி அமைத்துக் கொள்ளட்டும்.

மாற்று அரசாங்கத்திற்கான விளக்கம் தெரியாதவர்கள் அதனை நடைமுறைப்படுத்த எத்தனித்தால் அது தோல்வியிலேயே முடிவடையும்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சமாளிப்பதற்காகவும், தம்மீதான நீதிமன்ற விசாரணைகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே எதிரணியினர் மாற்று அரசாங்கத்தை உருவாக்குவதாக போலி பிரச்சாரங்களை செய்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

#ஐக்கிய தேசிய கட்சி   #ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி  #எஸ்.எம்.மரிக்கார்  #colombo  #srikotha   #SLP   #srilanka

No comments

Powered by Blogger.