தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் நடவடிக்கையால் மீண்டும் பொருத்தப்பட்ட மின் விளக்கு!

தமிழ்தேசிய மக்கள் மக்கள் முன்னணியினரால் பண்டத்தரிப்பு மாதகல் பிரதான வீதியில் கடந்த-07.9.2018 பொருத்தப்பட்ட மின்விளக்கு 14.10.2018 அன்று  சபையில் பெரும்பான்மை வகிக்கும் கட்சி உறுப்பினர்களால் கழற்றப்பட்டிருந்தது. 

இதனால் மேற்படி வீதியூடாக இரவு வேளைகளில் பயணம் செய்வோர் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வந்தனர். 

இந்த நிலையில் தவிசாளர் ஒருபக்கச் சார்பாக நடந்து கொள்கின்றாரா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. இதுதொடர்பாக மக்களிற்குத் தவிசாளர் என்ன பதில் கூறப் போகின்றார்? எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். 

இந்த நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் நேற்றைய தினம்(16-10-2018) இந்த விடயம் தொடர்பாக சபையின் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். 

உறுப்பினர்களின் கடிதத்தினை ஏற்க மறுத்த தவிசாளர் இந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார். 

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பிரகாரம் கழற்றப்பட்ட மின்விளக்கு (16,10,2018)  வேளையில் மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது. 

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயற்பட்டமையைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர். 

No comments

Powered by Blogger.