‘டூ இன் ஒன்’ கேம் ஆடும் நாயகன்!

தோனி கபடி குழு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.
இயக்குநர் ஐயப்பன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'தோனி கபடி குழு'. 'மை டியர் பூதம்' சீரியல் புகழ் அபிலாஷ் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் இவர் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போலே’ எனும் படத்தில் நடித்த லீமா இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் பலர் இணைந்து இப்படத்தில் நடித்துவருகின்றனர். ரோஷன் ஜோசப் சி.ஜே இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க, பின்னணி இசையை சி.எம்.மகேந்திரன் கவனிக்கிறார். ‘மனிதம் திரைக்களம்’ இதைத் தயாரிக்கிறது. டைட்டிலைப் போலவே கிரிக்கெட்டையும் கபடியையும் மையமாகக் கொண்டு உருவாகும் இப்பட படப்பிடிப்பு விழுப்புரம், உளுந்தூர்பேட்டை,கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் நடந்தது.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. கபடி ஆடும் நாயகன் பிடிகொடுக்காமல் எல்லைக்கோட்டைத் தொடுவதுபோல அமைந்துள்ள இந்த போஸ்டரில் கிரிக்கெட் மட்டையும்,பந்தும் எல்லைக்கோட்டிற்கு அருகில் கிடப்பதுபோலவும் காட்டப்பட்டுள்ளது. இப்பட இசை மற்றும் ட்ரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.