ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பழைய மாணவர்களுக்கான விருதுகள்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பழைய மாணவர்களுக்காக விருதுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கிவைக்கப்பட்டன.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களை பாராட்டும் “ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதீப – 2018” க்கான விருது நேற்று (புதன்கிழமை) பத்தரமுல்ல வோர்டர்ஸ் எட்ஜ் விடுதியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

மூன்றாவது தடவையாக இடம்பெற்ற இந்த விருது விழா ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவ சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலக்கியம், கலை மற்றும் தொடர்பாடல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய பழைய மாணவர்கள் இதன்போது பாராட்டப்பட்டனர்.

பேராசிரியர் சங்கைக்குரிய பாதேகம ஞானிஸ்ஸர நாயக்க தேரர் உள்ளிட்ட 40 பழைய மாணவர்கள் ஜனாதிபதியிடமிருந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் டபிள்யு.கே.எச்.வேகபிடிய, தேசிய ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் இத்தமல்கொட, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

#tamilnews  #colombo   #srilanka  #University   #Sri Jayewardenepura
Powered by Blogger.