பிரபாகரனை முகப்புத்தகத்தில் பதிந்த குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞன் பிணையில் விடுதலை!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன் முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக், ஷேர் செய்த குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர் ஒருவர் 10 மாதங்களுக்குப் பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகீ ராஜரத்ன நேற்று அனுமதியளித்துள்ளார்.

பிரபாகரனின் புகைப்படத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக இரத்தினபுரியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.

தினேஸ் குமார் என்ற இளைஞனே பிரபாகரனின் புகைப்படத்துடன் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளதாகவும், அதை லைக் செய்த குற்றத்திற்காக விதுசன் என்ற இளைஞன் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதில் குறித்த பதிவை லைக் செய்தமைக்காக கைது செய்யப்பட்டிருந்த விதுசனுக்கு பிணை வழங்க வேண்டுமெனக் கோரி தாக்கல் செய்த மீளாய்வு மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, அவரை பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்தார்.

அத்துடன், “முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனுக்கு ஒரே நாளில் பிணை வழங்க முடியுமெனில், லைக் செய்த இந்த இளைஞனை 10 மாதம் தடுத்து வைத்திருந்தது எவ்வகையில் நியாயம் என நீதிபதி வினவியுள்ளார்.

சர்ச்சைக்குரிய வாழ்த்துச் செய்தியை பதிவிட்ட குற்றச்சாட்டில் கைதான தினேஸ் குமார் என்ற இளைஞருக்கு பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் அவருக்கு பிணை பெறுவதில் சிக்கல் இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#arested  #relested #colombo  #police  #facebook #pirabakaran

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.