அதிமுக ஆட்சியில்தான் ஊடகங்கள் சுதந்திரமாக உள்ளன!

அதிமுக ஆட்சியில்தான் ஊடகங்கள் சுதந்திரமாக உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று (அக்டோபர் 18) செய்தியாளர்களை சந்தித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “கடந்த 13-ம் தேதி பேரூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் காலி நாற்காலிகள் இல்லை. செய்தியாளர்களின் கேமரா பறிக்கப்பட்டது பற்றி தெரியாது. அப்படி இருந்தால் கேமரா பறித்தவர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக ஆட்சியில்தான் ஊடக மற்றும் பத்திரிகை சுதந்திரம் அதிகம். அதிமுக அரசு பத்திரிக்கையாளர்களை அரவணைக்கிறது. நிறைய ஊடகங்களுக்கு அதிமுக அரசுதான் அனுமதி அளித்துள்ளது. திமுக ஆட்சியில் தொலைக்காட்சிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது என்று தெரியும்” என குறிப்பிட்டார்.

மேலும், “கோவை நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, சாலையோரத்தில் இருந்தவர்களுக்கு 60 ஆண்டுகளாக பட்டா, வீடு இல்லாமல் இருந்தவர்களுக்கு கீரணத்தம், அறிவொளி நகர், வெள்ளலூர் பகுதிகளில் வீடு வழங்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் பலபேர் உள்ளதால் அடுத்தகட்டமாக்க வழங்கப்படும். சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்தவர்கள் தகுதி உள்ளவர்களாக இருந்தால், அந்த 54 பேருக்கு மாற்று இடம் நிச்சயமாக வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
Powered by Blogger.