வவுனியாவில் போதை வில்லைகளுடன் சிக்கிய இளைஞர்கள்!

வவுனியா, ஓமந்தையில் இன்று அதிகாலை 1670 போதை வில்லைகளுடன் திருகோணமலையைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக
ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 1.30 மணியவில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சென்ற தனியார் பேருந்தை வழிமறித்த பொலிசார் சோதனைக்குட்படுத்திய போது சட்டவிரோத போதைவில்லைகளை தமது உடமையில் வைத்திருத்த 23, 25 வயதுடைய திருகோணமலையைச் சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 1670 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.  

No comments

Powered by Blogger.