தியாகி திலீபனின் நினைவேந்தலை ஒழுங்கமைத்த முன்னாள் போராளிக்கு விசாரணை..

மாவீரன் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு களை ஒழுங்கமைப்பு செய்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவரை பயங்கரவாத குற்றத் தடுப்பு பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ள னர்.
கடந்த செப்ரெம்பர் மாதம் யாழ்.நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்தவர்களில் ஒருவரான முன்னாள் போராளி கந்தையா பிரபாகரன் என்பவரையே பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைக்கு அழைத்துள்ளது.
யாழ். சாவகச்சேரி மறவன்புலவு பகுதியிலுள்ள இவரது வீட்டுக்கு நேற்றைய தினம்(18) சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் எதிர்வரும்- 29ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை வழங்கியுள்ளனர்.
எனினும், மேற்படி அழைப்பாணையில் காரணமெதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.