வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி!

கவிஞர் வைரமுத்து மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகம் மற்றும் இலக்கிய சூழலில் தனக்கென ஓர் இடம் வைத்திருப்பவர் கவிஞர் வைரமுத்து. சமீபத்தில் இவர் மீது பின்னணி பாடகி சின்மயி மீடூ இயக்கம் மூலம் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக ‘உண்மையைக் காலம் சொல்லும்’ என்று ட்விட்டரில் ஒரு பதிவும், ‘நீதிக்கு தலைவணங்குகிறேன்’ என்று கூறி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார் வைரமுத்து.
சின்மயியைத் தொடர்ந்து பலரும் வைரமுத்து மீது புகார் கூறி வரும் நிலையில் சென்னையை விட்டு மதுரைக்குச் சென்றாலாவது சிறிது ஆசுவாசமாக இருக்கும் என்று பசுமலையில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் இன்று மதிய உணவை முடித்துவிட்டு ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது சற்று உடல் நலம் பாதிக்கப்பட்டதால், உடனே மதுரை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம் மற்றும் உணவு ஒவ்வாமை பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாக அனுமதிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.
Powered by Blogger.