விஜய்க்குப் போட்டியாக ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.O’ படத்திலிருந்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்ஸன்,அக்‌ஷய் குமார்

உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘2.O’. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திலிருந்து சமீபத்தில் டீசர் வெளியாகி இணையத்தைக் கலக்கியது. இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீடு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது இப்படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்‌ஷன்.
ட்விட்டரில் இதுகுறித்துத் தெரிவித்துள்ள லைக்கா இப்படத்தின் லிரிக் வீடியோக்கள் நாளை (அக்டோபர் 20) காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ட்விட்டரில் பகிர்ந்துள்ள போஸ்டர்களைப் பார்க்கும்போது அக்‌ஷய் குமாரை மையப்படுத்திய ‘ராஜாளி’ எனத் தொடங்கும் பாடலும், ரஜினி மற்றும் எமி ஜாக்ஸன் இடையேயான ரொமாண்டிக் பாடலாக ‘எந்திர லோகத்து சுந்தரியே’ எனத் தொடங்கும் பாடலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடிக்கும் சர்கார் பட டீசர் இன்று வெளியாகியிருக்கிறது. ஆனால் ‘2.O’ டீம் திடீரென லிரிக்கல் வீடியோ குறித்து அறிவித்துள்ளது. சர்கார் டீசர் வெளியானால் அது இணையத்தில் செலுத்தும் ஆதிக்கத்தை முறியடிப்பதற்காகவே, அதற்குப் போட்டியாக தங்களது பட லிரிக்கல் வீடியோவை வெளியிட்டு இணையத்தில் டிரெண்டிங்கில் கொண்டுவர ‘2.O’ டீம் முயற்சிப்பதாக நெட்டிசன்ஸ் பலரும் தற்போது விமர்சனம் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

No comments

Powered by Blogger.