தபுவின் புதிய அறிவிப்பு!

நடிகை தபு தனது ட்விட்டர் பயன்பாடு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயர்களில் போலியான கணக்குகள் தொடங்கப்பட்டு உலாவருவதும் அதனால் சர்ச்சைகள் கிளம்புவதும் வழக்கமானதாகிவிட்டது.

இப்படியாக போலிக் கணக்குகள் உலாவரும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட பிரபலங்களே சமூக வலைதளங்களில் விளக்கம் அளித்துவருகின்றனர். அந்தவகையில் தற்போது விளக்கம் அளித்திருப்பவர் நடிகை தபு.
தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள நடிகை தபு, @tabuism எனும் பெயரைத் தாங்கி இயங்கும் ட்விட்டர் கணக்கு ஒன்றின் ஸ்க்ரீன் ஷாட்டை வெளியிட்டு ,“மேற்கண்ட பெயரில் இயங்கும் ட்விட்டர் கணக்கு போலியானது” எனக் கூறியுள்ளதுடன் அது தன்னுடையது அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் @tabuism எனும் பெயரில் இயங்கும் கணக்கு ஒரிஜினலா, போலியா என இதுநாள் வரைக்கும் தெரியாமல் இருந்து வந்த ட்விட்டர் உபயோகிப்பாளர்களுக்கு தபுவிடமிருந்தே தற்போது பதில் கிடைத்துள்ளது.
தமிழில் பிஸி நடிகையாக வலம்வந்த தபு சமீப காலமாக தமிழ்ப் படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். தமிழில் விக்ரம் நடித்த டேவிட் எனும் படத்தில்தான் கடைசியாக அவர் நடித்திருந்தார். ஆனாலும் இந்தியில் தொடர்ச்சியாக நடித்துவரும் அவர் சல்மான் கான் நடிக்கும் பாரத் உள்ளிட்ட சில படங்களில் பிஸியாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.