அரசாங்கத்திற்கு இனியும் கால குஞ்சுகள்??

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கான முழு பொறுப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பே ஏற்கவேண்டும் என வலியுத்தப்பட்டுள்ளது.

தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியினால் இன்று(திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் விடயத்தில் இனியும் காலம் தாழ்த்தாது உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தடவைகள் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அதனால் எவ்வித பலனும் கிடைக்கவில்லையெனவும் அரசாங்கத்திற்கு இனியும் கால அவகாசம் வழங்கவேண்டிய அவசியமில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்க அழுத்தம் கொடுத்து உயிர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழுள்ள சரத்துக்களின் கீழ் விசாரணைகளை முன்னெடுத்திருந்தாலே அனைவரும் தண்டனையை முடித்து வெளியேறியிருப்பார்கள் எனவும் அவர்களின் நன்னடத்தையை கருத்திற்கொண்டு விடுதலை செய்வதற்கும் அந்த சட்டத்தில் இடம் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்களுக்கு இது தெரியாதா எனவும் அவர் குறித்த அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார். 

No comments

Powered by Blogger.