இடைக்கால அரசாங்கம் தொடர்பில் நாளை கலந்துரையாடல்!

இடைக்கால அரசாங்கம் ஒன்றினை அமைப்பது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும், பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்குமிடையில் நாளை(செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘குறித்த கலந்துரையாடலின் நோக்கம் நிறைவேற்றமடைந்தால் அது ஐக்கிய தேசிய கட்சிக்கு பாரிய சவாலாக காணப்படும்.

தற்போதைய அரசியல் நிலைகளில் சுதந்திர கட்சியின் நிலைப்பாடும், பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடும் ஒருமித்ததாகவுள்ளது.

ஆகவே இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடல் வெற்றிபெறுமாயின் தேசிய அரசாங்கத்தில் பாரிய திருப்புமுனை ஏற்படும்’ என தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.