யாழில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம்!


மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் அறவழிப் போராட்டமொன்று நடைபெறவுள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள், அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க கோரி மலையகமெங்கும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு வலு சேர்த்து, அவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில், ‘உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமும் கைகோர்ப்போம்’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் அறவழிப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டம் நாளை காலை 9.30 மணிக்கு யாழ் பேரூந்து நிலையம் முன்பாக இடம்பெறவுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்காய் வடக்கில் இருந்து உரிமைக் குரல் கொடுக்கும் நோக்கில் சமூக வலைத்தள நண்பர்களினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

#தோட்டத் தொழிலாளர்கள்  #போராட்டம்    #யாழ் பேரூந்து நிலையம்   #மலையக   #jafffna  #srilanka   #tamilnews

No comments

Powered by Blogger.