"சூழல் அரசியலும் நிலஅபகரிப்பும்" உரையரங்கு!

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் "சூழல் அரசியலும் நிலஅபகரிப்பும்" என்ற கருப்பொருளில் உரையரங்கு இன்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்.இந்துக்கல்லூரி சபாலிங்கம் அரங்கில் இடம்பெற்றுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல்துறைத் தலைவர் கே.ரீ.கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அரசியல் ஆய்வாளர் நிலாந்தனின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து ஊடகவியலாளர் து.ஜெயராஜ் "தொல்லியலும் நிலஅபகரிப்பும்" என்ற தலைப்பிலும் கிழக்கு மாகாண முன்னாள் காணி ஆணையாளர் க.குருநாதன் "மகாவலியும் நிலஅபகரிப்பும்" என்ற தலைப்பிலும் சட்டத்தரணி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமார் "சட்டங்களும் நிலஅபகரிப்பும்" என்ற தலைப்பிலும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன் "வனங்களும் நிலஅபகரிப்பும் " என்ற தலைப்பிலும் உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் உரையாற்றினார்.
Via @thunnalai selvam


No comments

Powered by Blogger.