சு.க அமைப்பாளரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட துபாக்கிகள் தொடர்பாக தீவிர விசாரணை!

துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் இம்தியாஸ் காதர் தொடர்பாக பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


நேற்றைய தினம் அதிகாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய அவரின் வீட்டை சுற்றி வளைத்த விசேட அதிரடிப்படையினர் பல்வேறு ரக துப்பாக்கிகள் சிலவற்றை அங்கிருந்து மீட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிகள் எதற்கும் அனுமதி பத்திரம் பெற்றிருக்கவில்லையென்பதுடன் அவற்றில் சில விசேட நடவடிக்கைகளின் போது பயன்படுத்தும் ஆயுதங்கள் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இம்தியாஸ் காதரை கைது செய்துள்ள பொலிஸார் அவரிடம் இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர் தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. 
Powered by Blogger.