பயத்தம் பருப்பு முறுக்கு தயாரிப்பது எப்படி!

தேவையானப்பொருட்கள்:


பச்சரிசி – 2 கப்
பயத்தம் பருப்பு – 1/2 கப்
வெள்ளை எள் – 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை 1 அல்லது 2 மணி நேரம் ஊறவைத்துக் கழுவி, நிழலில் அரை மணி நேரம் காய வைத்து, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து சலித்துக் கொள்ளவும். அல்லதுகடைகளில் கிடைக்கும் அரிசி மாவையும் உபயோகிக்கலாம்.

பயத்தம் பருப்பில் 2 அல்லது 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக வைக்கவும். வெந்த பருப்பு ஆறியவுடன் அதில் அரிசி மாவு, எள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, தேவையானால் சிறிது தண்ணீரையும் தெளித்து, மிருதுவாக முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும். முறுக்கு அச்சில் ஒற்றை கண் நட்சத்திர வடிவிலான வில்லையைப் போட்டு, மாவை அதில் போட்டு எண்ணையில் சிறு சிறு வட்டங்களாக பிழிந்து விடவும். முறுக்கை திருப்பி விட்டு நன்றாக வெந்ததும் எடுத்து வைக்கவும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.