பரந்தன் இரசாயன தொழிற்சாலை தொழிற்சாலை மீள் உருவாக்க ஆராய்வு!

சுமார் 30 வருடங்களிற்கு மேலாக கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இயங்கி வந்த இரசாயன தொழிற்சாலை மீள இயக்குவது தொடர்பில் நீண்டகாலமாக முயற்சிகள் இடம்பெற்றன.இந்நிலையில் அமைச்சர் ரிஷாட் பதிஉத்தீன்

தலைமையிலான குழு இன்று கிளிநொச்சி பரந்தன் ரசாயன தொழிசாலை அமைப்பது தொடர்பில் பார்வையிட்டனர் இன்று காலை 10.30 மணியளவில் பரந்தன் பகுதியில் இயங்கி வந்த பரந்தன் இரசாயன தொழிற்சாலை அமைந்திருந்த பகுதியை பார்வையிட்டனர். ரிஷாட் பதிஉத்தீன் தலைமையில் ஜப்பான், கொரியா, இலங்கை ஆகிய நாட்டின் பொறியியலாளர்கள் குழு குறித்த தொழிற்சாலை தொடர்பில இன்று பார்வையிட்டனர்.

இந்த நிலையில் இன்று குறித்த் குழுவினர் வருகை தந்திருந்தனர். ஆணையிறவு உப்பளத்திலிருந்து பெறப்படும் இரசாயன கழிவுகளை சூழல் மாசடையாதவாறு எவ்வாறு குறித்த தொழிற்சாலை ஊடக இராயன உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே குறித்த குழுவினர் இன்று வருகை தந்துள்ளனர். குறித்த குழுவினர் தொடர்ந்து ஆணையிறவு உப்பளம் பகுதிக்கும் சென்றிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.
Powered by Blogger.