முல்லைத்தீவு மாவட்டத்தில் காணி அபகரிப்பு அதிகரிக்கின்றது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழிகாட்டலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் திட்டமிடலில் இடம்பெறும் ‘நில அதிகாரமும் அதிகாரப்பகிர்வும்’ சிறப்புப் பேருரை நிகழ்வு நேற்று மாலை ஒட்டுசுட்டான் தான்தோன்றி

ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.இதன் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் காணி அபகரிப்பு என்பதே பாரிய பிரச்சினையாக உள்ளது. அபிவிருத்திக்கு முதல் எமது இருப்புக்கள் உறுதிப்படுத்தப்படவேண்டும்” என கோரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா.

அவர் மேலும் தெரிவிக்கையில் புதிய அரசமைப்பு குறித்து தென்பகுதியில் ஒருவிதமான பிரசாரம். வடபகுதியிலே இன்னொருவிதமான பிரசாரம். பிரபாகரனின் ஆசை நிறைவேறுகிறது, தமிழீழம் மலரப்போகிறது என்று மஹிந்த அணியினர் தென்பகுதியில் பிரசாரம் செய்கின்றனர்.

இந்த யாப்பில் எதுவுமில்லை என்பது வடக்கில் இன்னொரு தரப்பினரது பிரசாரம். அதில் என்ன இருக்கிறது என்று ஊடகவியலாளர்கள் கேட்டால் நான் இன்னும் அதை வாசிக்கவில்லை என்று இன்னும் சில தலைமை கள் பிரசாரம். இந்த அரசமைப்புக் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வடக்கு, கிழக்கில் தெளிவாக விளக்கமளித்து வருகிறார். தமிழ் மக்களுக்கான ஒரு சிறந்த தீர்வை விரும்பாத சிலர் இதை குழப்பும் விதமாக பல பிரசாரங்களைச் செய்கின்றார்கள்.இன விடுதலைக்காக நாம் தொடர்ந்து பாடுபட்டு, பல இன்னுயிர்களைத் தியாகம் செய்து ஆயுதப் போராட்டம் தோற்று இன்று அகிம்சா வழியில் போராடிக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

#jafffna   #mullathivi   #tamilnews  #இலங்கை   #தமிழரசுக் கட்சி #சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா   #சுமந்திரன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.