மாமியாரை கடுமையாகத் தாக்கிய மருமகன் கைது!

திருகோணமலை – கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கஜுவத்தைப் பகுதியில் மாமியாரை தாக்கிய மருமகனை இன்று காலை கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேகநபர், மதுபோதையில் தனது மனைவியான நிஷன்சலாவை (34 வயது) பொல்லால் தாக்கியுள்ளார். இதன்போது குறித்த பெண்ணின் தாயர் தடுப்பதற்காகச் சென்ற போதே சந்தேகநபர் அவரை பொல்லால் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த சந்தேகநபரின் மாமியார் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு வலது கால் உடைந்துள்ளதுடன், இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் விபத்து சேவைப் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அந்த நபரின் மனைவி அருகிலுள்ள கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#திருகோணமலை  #மது  #கோமரங்கடவெல  #கைது  #மாமியார்  #வைத்தியசாலை #trincomalle  #tamilnews

No comments

Powered by Blogger.