எமது ஆட்சி இருந்திருந்தால் ஐ.நாவுக்கு பதிலடி கொடுத்திருப்போம்! - கோத்தா

எமது ஆட்­சிக் காலத்­தில், போர்க்­குற்­றச்­சாட்டு சுமத்தி இரா­ணுவ அதி­கா­ரியை ஐ.நா. திருப்பி அனுப்­பி­யி­ருக்­கு­மா­னால், எங்­க­ளின் பதில் வேறு வித­மாக

இருந்­தி­ருக்­கும். ஐ.நா. அமை­திப் படை­யில் உள்ள ஒட்­டு­மொத்த இரா­ணு­வத்­தி­ன­ரை­யும் நாம் திருப்பி அழைத்­தி­ருப்­போம் என்று தெரிவித்துள்ளார், முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச.

கோட்­டை­யில் நேற்று இடம்­ பெற்ற எலிய அமைப்­பின் கூட்­டத்­தில் கலந்து கொண்டு கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­வாறு கூறி­யுள்­ளார். 'இந்த அரசு சர்வதேச சமூ­கத்தை வென்­றி­ருப்­ப­தாக கூறு­வது உண்­மை­யா­யின், ஐ.நா. சமா­தா­னப் படை­யில் பணி­யாற்­றச் சென்ற இரா­ணு­வக் கட்­ட­ளைத் தள­ப­தியை திருப்­பி­ய­ழைக்­கு­மாறு விடுத்­தி­ருந்த ஐ.நாவின் அறி­விப்பை நிரா­க­ரித்­துக் காட்­ட­வேண்­டும். இன்று ஐரோப்­பிய நாடு­கள் எமது நாட்டு இரா­ணு­வத்­தி­ன­ரைப் புறக்­க­ணிக்­கும் நிலமை காணப்­ப­டு­கின்­றது. இறு­திப் போரில் கலந்து கொண்­ட­வர்­களை அவர்­கள் தங்­க­ளது நாடு­க­ளுக்­குள் பிர­வே­சிக்க அனு­ம­திக்­காத ஒரு நிலமை காணப்­ப­டு­ப­கின்­றது என்­றார்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.