இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

யாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 31ஆம் ஆண்டு

நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நினைவு கூறலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், வைத்தியசாலை சமூகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைதி காக்கும் படையினராக வடக்கு கிழக்கிற்கு இந்திய படையினர் வருகை தந்திருந்தனர்.
எனினும், இந்திய – இலங்கை ஒப்பந்தம் சரியான முறையில் அமுல்படுத்தப்படாமையினால், இந்திய படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டதை அடுத்து, விடுதலைப்பலிகளுக்கு எதிராக இராணுவ ரீதியான தாக்குதல்களை ஆரம்பித்த இந்திய படையினர் ஈவிரக்கமின்றி பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.
அந்த வகையில் ஒக்டோபர் 21ஆம் திகதி(1987) யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் வைத்தியர்கள், தாதியார்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்ததோடு மேலும் பலர் காயமடைந்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.