கள்ளக் காதலன் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த பெண்!

ஆராச்சிக்கட்டுவ - ஆணைவிழுந்தாவ பகுதியில் பெண்ணொருவர் தனது கள்ளக்காதலன் மீது பெற்றோல் ஊற்றி தீயிட்டு கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில், கல்கமுவ - கிரிபாவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஹெவிரிதி என்பவரே பாதிக்கப்பட்டு ஹலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட குறித்த பெண் திருமணமாகிய 2 குழந்தைகளின் தாய் ஆவார்.

இவர் தனது கணவரை பிரிந்த நிலையில் 11 வருடங்களாக குறித்த நபருடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபர் வழமை போல் பெண்ணின் வீட்டுக்கு வந்த வேளையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த பெண் அந்த நபர் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.